Tuesday, 13 July 2010

சைக்கிள்

ஒரு பெண்ணாக சைக்கிள் எனக்கு தந்த நம்பிக்கையை வெவ்வேறு தளங்களில் நட்டுச் செல்லும் ஒரு எளிய முயற்சி இந்த சைக்கிள் எனும் எழுதுதளம். நன்றி

7 comments:

கீதா இளங்கோவன் said...

வலைப்பூ உலகத்துக்கு வருக. இனி சைக்கிளை பார்க்கும் போது உங்கள் நினைவு தான் வரும்.

சுந்தர்ஜி. said...

இந்த முரணை நான் ரசிக்கிறேன்.முதல் பதிவுக்கு வாழ்த்துச் சொல்ல முடிவில் வந்திருக்கிறேன்.நிறைவாக இருக்கிறது உங்கள் எழுத்து ஆரவாரமில்லாமல் ஒரு பயணத்தின் வழிப்பாதையில் பெயர் தெரியாது பூத்துக் குலுங்கும் தாவரங்களின் தன்மையுடன்.நிறைய இது போல நிறைவாக எழுதும் வரத்தைக் காலம் உங்களுக்கு அள்ளித்தரட்டும் சைக்கிள்.

சைக்கிள் said...

எல்லா வார்த்தைகளுக்கும் நன்றியோடு...

Vel Kannan said...

இந்த முதல் பதிவை இன்று தான் கவனித்து படித்தேன். இது போல் இன்னும் இரண்டு (மதுரை புத்தக திருவிழா இறுதி நாள் ,மனுஷ்ய புத்திரனின் 'சுயம்' கவிதை - ஒரு உளப்பகுப்பாய்வுப் பார்வை) உங்களின் கவிதையை ஊன்றி படித்தேன். படிக்கிறேன். பிடிச்சுருக்கு. அதே போல் ரத்த உறவு பற்றிய பதிவு. இதுவும் எனக்கு பிடித்த பதிவு.

சைக்கிள் said...

நன்றி திரு.வேல்கண்ணன்.

Harani said...

அன்புள்ள...

இப்போதுதான் சுந்தர்ஜி வலைப்பதிவு வழியாக உங்கள் வலைப்பூவுக்குள் வந்ததும்தான் உணர்ந்தேன் இவ்வளவு தாமதமாக வந்ததற்கு. உங்கள் கவிதையுலகம் எனக்கு வெகு சுகமாகவும் ஆறுதலாகவும் இருக்கிறது. ஒரு மயக்கம் தருகிறது. ஒரு நிம்மதியைத் தருகிறது. ஒரு பரவசத்தைத் தருகிறது. சொற்களை நீங்கள் கையாளும் கவிதைமொழி அதற்கான படங்கள் எல்லாமும் உங்களைத் தனித்தடையாளப்படுத்துகிறது. எல்லாக் கவிதைகளையும் படித்துவிட்டேன். மனது கணத்துக்கிடக்கிறது. சுந்தர்ஜிக்கு நன்றி (அவருடைய வலைப்பூ வழியாக வந்தமைக்கு). இனி தொடர்ந்து வாய்க்கிற சமயங்களில் பார்ப்பேன். எழுதுங்கள். வெகு ஆரோக்கியமான ஒரு கவிதையுலகில் சஞ்சரித்த திகட்டாத அனுபவம். மனமார்ந்த வாழ்த்துக்கள். pl. remove the word verification. It disturbs to enter my comments.

சைக்கிள் said...

வருகைக்கு, வாசிப்பிற்கு, வார்த்தைகளுக்கு, அனுபவப் பகிர்வுக்கு, ஊக்கத்திற்கு, வாழ்த்திற்கு, கவிதை மனதிற்கு நன்றி திரு.ஹரணி.