Tuesday, 20 July 2010

அன்பாக இருக்க பொது குடும்ப விதிமுறைகள் 8

விதி 1:
குடும்பத்தை  நேசி
உட்பிரிவு  i) குடும்பத்தை மட்டும் நேசி
விதி  2:
நட்பு கொள்
உட்பிரிவு i) அங்கீகரிக்கப்பட்ட நட்பு மட்டும்
                ii) 'ஆத்திர அவசரத்துக்கு உதவ' மட்டும்
                iii) சம பால் நட்பு மட்டும்
விதி 3:
திருமண உறவு கொள்
உட்பிரிவு i) சாதீய உறவுக்குள் மட்டும்
விதி  4:
மக்கட் பேறு கொள்
உட்பிரிவு  i) உடமையுறவு மட்டும்
விதி 5:
பெற்றோர்  பேண்
உட்பிரிவு  i) தம் மக்கள் பள்ளி செல்லும் மட்டும்
விதி  6:
பணியிட உறவு கொள்
 உட்பிரிவு i) தாமரை இலை நீராக மட்டும்
                 ii) சொறிந்தால் சொறியப்படும் மட்டும்
விதி 7:
 சமூக உறவு கொள்
 உட்பிரிவு i) செல்வர் உறவு மட்டும்
விதி 8:
 யாதும் ஊரே யாவரும் கேளிர்
 உட்பிரிவு i) உலக தத்துவம் மட்டும்.
!!!!!!!!

6 comments:

கீதா இளங்கோவன் said...

ரத்தினச் சுருக்கம். ஆனால் கூர்முள்ளாய் தைக்கும் உண்மைகள் தோழி.

சைக்கிள் said...

முள்ளை எப்படி எடுக்க போகிறோம் என்றுதான் தெரியவில்லை. கவலையாக இருக்கிறது.

kumar said...

வலைப்பூவின் வண்ணமும் படங்களுமே கவிதை. வரிகளில் லயிக்கவில்லை மனது.

சைக்கிள் said...

சரி.

சுந்தர்ஜி. said...

உங்கள் தலைப்பிலேயே சூடு தெரிகிறது.

அன்பைக் கடைப்பிடிக்க விதிமுறைகளும் அதன் உட்பிரிவுகளும் சமூக அக்கறையின் மேல் உங்கள் மொழி செருகிய வாள்.மென்குரலுக்கு உரிய உங்கள் மொழி சமூக அவலத்தின் கசடுகளைக் குரல் உயர்த்திச் சாடுகிறது.

ஒத்த அலைவரிசை கொண்டவர்களுக்கு உரிய வரிசை இது.சமூகத்தின் மேலுள்ள பார்வையால் உங்கள் மேல் மதிப்பு மேலும் உயர்கிறது.

சைக்கிள் said...

நன்றி திரு.சுந்தர்ஜி