Saturday, 21 August 2010

வீடு பேறு


நத்தை ஒன்று
போகிறது
மெல்லுடலில்
பாரிய வீட்டை
சுமந்தபடி.
போகிறதா?
ஆம்.
உன்னை போல்
என்னை போல்
நம்மை போல்.
மெல்ல அது
நகர்ந்து எஞ்சிய
நீர்த்தடங்களில்
வீடு குறித்த
ரகசிய     
கேள்விகளின்  ரசம்                                           
மின்னிக்கொண்டு
இருக்கிறது.

2 comments:

சுந்தர்ஜி. said...

//மெல்ல அது
நகர்ந்து எஞ்சிய
நீர்த்தடங்களில்
வீடு குறித்த
ரகசிய
கேள்விகளின் ரசம்
மின்னிக்கொண்டு
இருக்கிறது.//

அபாரம் இந்த மென் கவிதை. இந்தப் பக்கத்தில் மொழியில் புதுத் தடங்களை நீங்கள் அமைதியாய் ஏற்படுத்துதல் போல.

சைக்கிள் said...

இது எனக்கும் பிடித்த கவிதை