Friday, 17 September 2010

துலக்கம்


காரின்
சடசடத்த மழைச் சத்தம்
பச்சையின்
சலசலக்கும் பயிரொலி
மஞ்சளின்
சரசரத்த ஒளி வார்த்தை
நீலத்தின்
பரபரக்கும்  சிறகோசை
வெண்மையின்
சப்தமற்ற சப்தம்...
இனி தோன்றுவதை
நீங்கள் எழுத...
..........................
இப்படி மட்டும்
சொல்கிறது கவிதை
நிறங்களுக்கு
சப்தங்கள் போல்
பிரதிக்கு
வடிவங்கள்.
வாசிப்பிற்கே... 
விரிந்த சிறகுகள்.

5 comments:

பத்மா said...

அருமை சைக்கிள் ..சுந்தர்ஜி உங்கள் எழுத்தை பற்றி மிகவும் சிலாகித்து சொன்னார் ..மாலை வந்து அனைத்தையும் வாசிக்கிறேன் ..
கவிதை இனிமை ..
வண்ணங்களுக்கு இசையமைத்து இருக்கிறீர்கள் ..நன்று

சுந்தர்ஜி. said...

பரவசம்.எழுதப்படாதவற்றின் மேல் வர்ணங்களை விசிறிச் சென்றது எழுதப்பட்டவை.நிசப்தத்தின் இசையாய் ஒலிக்கிறது இக்கவிதையின் நிரப்பப்படாத வெற்றிடம்.மலர்ந்த இவ்விதழ்களில் சிந்திக்கிடக்கிறது இன்னும் மீதமிருப்பவை.என் புலரி பெருமையுற்றது சைக்கிள்.

சைக்கிள் said...

தகுதிக்கு மீறிய வார்த்தைகள். ஊக்கத்திற்கு நன்றி - இருவருக்கும்.

Vel Kannan said...

எவ்வளவு சொன்னாலும் தகும் சைக்கிள் உங்கள் எழுத்துகளுக்கு. எல்லாவற்றையும் ஒரு மூச்சில் படித்து முடித்தேன். பாராட்டுவதை தவிர வேறு ஒன்று சொல்ல தோன்றவில்லை இப்போதைக்கு.
பத்மா சொன்னது போல் //வண்ணங்களுக்கு இசையமைத்து இருக்கிறீர்கள்//
ராஜாவின் இசை கேட்டது போல் உள்ளது. வாழ்த்துகள்.

சைக்கிள் said...

ஊக்கத்திற்கு நன்றி திரு.வேல்கண்ணன்