Thursday, 7 October 2010

இன்று

இன்று நெடுஞ்சாலையில்
ஒரு நாய் அடிபட்டுக் குடல் சரிந்து
இறந்து கிடந்தது
இன்று மன நலமற்றவர் ஒருவர்
ஆடைகளை கிழித்தபடி
தனக்குள் பேசிக்கொண்டிருந்தார்
இன்று தலைவரின் மக'ரின்' மக'ரின்'
பிறந்த நாள் ஆலோகலங்கள்
நகரை அலற வைத்துக் கொண்டிருந்தன
இன்று மாதவிடாய் என்பதால்
வீட்டில் உணவு மறுக்கப்பட்ட பெண்
மயங்கி விழுந்தாள்
இன்று மரங்களில்
பூக்கள் அற்ற வெறுமை
இன்று சாதியின் காரணமாக
அவர் அவமானப்படுத்தப் பட்டார்
இன்று வாழிடத்தில்
தண்ணீர் பத்தடி கீழே
போய்விட்டதாகக் கணிக்கப் பட்டது
இன்று 2.7 அளவுள்ள இடம்
வாமன அவதாரமாய்
மகாபலி எடுக்க முயன்றது.
இன்று இப்படித்தான் இருக்கிறது.

3 comments:

சுந்தர்ஜி. said...

இன்றின் நிதர்சனம் வதைக்கிறது தோழி.பாலயின் மத்தியில் நிற்பதாய் உணர்கிறேன் நான்.வருத்தமாய் இருக்கிறது.

சுந்தர்ஜி. said...

பாலை பாலயாகி விட்டது.திருத்த இது.

சைக்கிள் said...

ஆம் நண்பரே!