Sunday, 3 October 2010

பகிர்வு: ப்ரெய்லில் ஒரு பிரார்த்தனை


கதிராடும் சோளத்தில்
காற்றாட, மார்கழியின்
பனிவிலகா இளவெயிலில்,                                
பாட்டெழுதும் மௌனத்தில்
ஆழ்ந்திருந்த சர்ச்சில்                              
ஆள்உயரச் சிலையில்லை
அலங்காரப் படமில்லை.
பாதிரியார் பைபிளுடன்-
பத்துவிரல் ஆர்கனுடன்
காத்திருக்க - வந்தார்கள்
கைப் பிரம்பில்
கால் உணர்வில்
கண் படைத்த பாலகர்கள்.
அவர்கள்
பாட்டெல்லாம் சித்திரங்கள்.
                          - கல்யாண்ஜி    

3 comments:

செல்வராஜ் ஜெகதீசன் said...

நல்லா இருக்குங்க.

Vel Kannan said...

பகிர்வும் படமும் அருமை

சுந்தர்ஜி. said...

என்னுடன் பாளையங்கோட்டையில் படித்த என் ஒன்பதாம் வகுப்பு அற்புதராஜ் வேளாங்கண்ணியின் ப்ரெய்ல் சங்கீதம் கல்யாண்ஜியின் இக்கவிதையில் உயிர்த்தது.நன்றி கல்யாண்ஜி மற்றும் சைக்கிள்,