Tuesday, 26 October 2010

இந்த கவிதையும்

பாலைவனப் பயணிக்கு
சிறுபறவை நிழலும்
வார்த்தையற்ற தனிமையில்
வருடிச் செல்லும் காற்றும்
கதறி அழுகையில்
தனிமையான இடமும்
வெம்மையில் எறும்புகளுக்கு
நீரின் குளிர்ச்சியும்
கசந்த மனதிற்கு
தெருவோரப் பூக்களும்
காலொடிந்த நாய்க்கு
மனிதரிட்ட சோறும்
தவிக்கும் முதுமைக்கு
கைத்தடி பலமும்
நாள்பட்ட வலிக்கு
நானற்ற துயிலும்
ஏதுமில்லா எனக்கு
இந்த கவிதையும்.

8 comments:

சுந்தர்ஜி said...

தேடியலைந்தவனுக்கு திரவியமாய் இந்தக் கவிதையும்.

செல்வராஜ் ஜெகதீசன் said...

நல்லாயிருக்குங்க.

Vel Kannan said...

//ஏதுமில்லா எனக்கு
இந்த கவிதையும்//
நிச்சயமாக கவிதை உலகு எல்லாவற்றையும் தரும் சைக்கிள்

திருநாவுக்கரசு பழனிசாமி said...

எல்லோருக்கும் எல்லாமும்...

சைக்கிள் said...

#ஊக்கத்திற்கு நன்றி திரு.சுந்தர்ஜி.
#நன்றி திரு.செல்வராஜ் ஜெகதீசன்.
#கொடுப்பது, கொடுக்காதது பற்றி எழுத்து எண்ண விடுவதில்லை.அது ஒரு கிறுக்கு.எனினும் நல்லெண்ணத்திற்கு நன்றி திரு.வேல்கண்ணன்.
#...எனில் சந்தோஷம் திரு.திருநாவுக்கரசு பழனிசாமி.

Harani said...

ஒரு எதார்த்தமான கவிதைக்கான அத்தனை அம்சங்களும் கொண்ட கவிதை. நல்ல வாழ்வியலின் தடத்தைப் பதிவு செய்கிறது. வாழ்த்துக்கள்.

பத்மா said...

அப்பாடி கவிதை இருக்கே !...

சைக்கிள் said...

# நன்றி திரு.ஹரணி.
# என்னமோ சிரிப்பு வருகிறது பத்மா உங்கள் கருத்தைப் படித்ததும்.நன்றி.