Sunday, 19 December 2010

நிலை

அடித்துப் பொழிகிறது மழை.
ஆரவாரிக்கிறது கடல்
அலைகள் சப்திக்க.
கரையோரப் படகுகளோ
அமைதிக்காய் காத்திருக்கும்
நீல வான் பார்த்து.
கருங்கற்கள் மட்டும்
நனைந்து பளபளக்கும்
இடுக்கில் சிறு செடி சிரிக்க.
மழையோ,படகோ
கடலோ,கல்லோ
இணைக்கும் ஈரத்தில்
நமது இருப்புகள் வேறு
எதிர்வுகள் வேறு
வேறு வேறு.

9 comments:

முல்லை அமுதன் said...

nahttp://kaatruveli-ithazh.blogspot.com/ntru.
thodarka.
nadpudan.
mullaiamuthan.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ஆம் ..வேறு வேறு தான், நண்பரே!

சுந்தர்ஜி said...

ஒன்றோடு கலப்பதும் ஒன்றாமல் இருப்பதும்தான் மனதுக்கும் அறிவுக்குமுள்ள இடைவெளியாய் விரிகிறது.

அறிவைக் கொண்டு பார்க்க நேருகையில் அங்கே ஏற்கெனவே அதை மனது கொண்டாடிக்கொண்டிருக்கிறது.

அற்புதமான பார்வையும் சிந்தனையும் சைக்கிள்.

இந்தப் புதிய டெம்ப்ளேட்டின் வடிவமும் நிறமும் அழகாய்ப் பொருந்துகிறது.

இந்த டெம்ப்ளேட்டுக்குப் பொருந்தும் வகையில் இணைப்புகளின் நிறத்தை மட்டும் சற்று மென்மையான நிறங்களில் தேர்வு செய்யுங்கள்.இந்த அழகு மேலும் எழில் கூட்டும்.

paarkkadal sakthi said...

அட.. கசிகிறது

அஹமது இர்ஷாத் said...

அழ‌கான‌ வார்த்தைக‌ள்..ம‌ழையில் ந‌னைந்த‌ உண‌ர்வு..

vasan said...

ம‌ழை ஒரு விசித்திர‌ம். ஒன்றே ப‌லவாய் ஒவ்வொன்றிற்கும் த‌னித்துவுமாய்,
சிற்றுயிர்க்கு கால‌னாய், காளானுக்குத் த‌ந்தையாய், காம‌னுக்குத் தோழ‌னாய்,
வாடிய‌ ப‌யிர்க‌ளுக்கு வ‌ள்ள‌லாய், வறிய‌வ‌ர்க‌ளுக்கு ந‌டுக்க‌மாய்.. இப்ப‌டி எப்ப‌டி எப்ப‌டியோ!

சைக்கிள் said...

# நன்றி திரு.அமுதன்.
# நன்றி திரு.ராமமூர்த்தி
# நன்றி திரு.சுந்தர்ஜி. நீங்கள் சொல்லியிருப்பது
விரிவாக எழுத வேண்டிய உளவியல் விஷயம்.
# நன்றி திரு.பாற்கடல்.சக்தி.
# வருகைக்கும், உணர்வுப் பகிர்தலுக்கும்
நன்றி.திரு. இர்ஷாத்.
# நன்றி திரு.வாசன். மழைகளும் வேறு.
நிலைகளும் வேறு. மழை இந்த கவிதையில்
ஒரு குறிப்பீடு.(SIGNIFIED)

Harani said...

மனம் கசிகிற தருணங்களில் வெப்பம் அலையடிக்கிறது. காத்திருப்பதன் அடையாளத்தை உறுதிச் செய்யமுடியாத சங்கடத்தில் இருப்பினை ஐயம் கொள்ளவேண்டியிருக்கிறது. இருப்பினும் இருப்பும் எதிர்வுகளும் வேறுவேறு என்றாலும் அது புரிதலின் அர்த்தத்தில் அர்த்தமற்றுப்போய் நேராகிவிடும். நல்ல ஆழம் நிறைத்த கவிதை.

சைக்கிள் said...

யோசிக்க வைக்கும் கருத்திற்கு நன்றி திரு.ஹரணி.