Wednesday, 11 May 2011

தெரியவேயில்லை


ஓடிப்பிடித்தல் 
நொண்டி
கண்ணாமூச்சி
கல்லா மண்ணா
திருடன் போலீஸ்
படிகளிலிருந்து குதித்தல்
பாம்புக் கட்டம்
வழுக்கும்  சறுக்கில்
கீழிருந்து மேல்  ஏறல்
பூப் பறிக்க வருகிறோம்
மெல்ல வந்து முள்ளிப் போனவளை
முகபாவம் கொண்டு கண்டறிதல்
மணலுள் பொருள் தேடும்
கிச்சு கிச்சுத் தாம்பாளம்
இன்னும்
ஊஞ்சல், விழுதாட்டம், ட்ரேட்
செத்து விளையாடல்
என ஆடிய பொழுதுகளில்
தெரியவேயில்லை
வளர்ந்த பின்னும்  வாழ்க்கை
இப்படித்தானென...

17 comments:

சுந்தர்ஜி said...

எல்லாமே விளையாட்டும் எல்லாமே வினையுமாய்.

ஆனாலும் விளையாட்டுக்குக் கூட இந்த அழகான விளையாட்டுக்கள் விளையாடப்படாமல் போனதுதான் வாழ்வே வினையாகிப் போனதோ?

நல்ல கவிதை. நல்ல பார்வை மிருணா.

இரா.எட்வின் said...

ஆஹா,
தொகுத்துவிடுங்கள்.

Ramani said...

வாழ்க்கை விளையாட்டு என
வெறுமனே சொல்கையில்
அர்த்தம் புரியவில்லை
நீங்கள் அத்தனை விளையாட்டுக்களையும்
பட்டியலிட்டபின் படித்துப்பார்க்கையில்தான்
தெளிவாகப் புரிகிறது
அழுத்தமான சிந்தனை
சிறப்பான பதிவு
தொடர வாழ்த்துக்கள்

நிலாமகள் said...

//ஆடிய பொழுதுகளில்
தெரியவேயில்லை
வளர்ந்த பின்னும் வாழ்க்கை
இப்படித்தானென...//

வாழ்க்கையே போர்க்களம் என்றாலும் விளையாட்டாய் பாவிக்க ஒரு பயிற்சியோ....!

நிரூபன் said...

சவால்கள் நிறைந்த வாழ்க்கையின் அர்த்தம் சிறு வயதில் புரியாதிருப்பது வேதனையானதே, என்பதைக் கவிதையில் உரைத்துள்ளீர்கள்.

திருநாவுக்கரசு பழனிசாமி said...

வாழ்க்கை விளையாட்டுக்களால் ஆனதுதான்

சுந்தர்ஜி said...

மிருணா! உங்களின் எதெற்கென? கவிதை பா.ராஜாராமின் கருவேலநிழலில் பார்க்கப் பெருமையாகவும் ஆனந்தமாகவும்.

வாழ்த்துக்க்ள்.

Vel Kannan said...

நல்ல விளையாட்டு இது

மதுரை சரவணன் said...

வாழ்க்கை விளையாட்டில் ஒவ்வொரு நாளும் புதுமையே...!வாழ்த்துக்கள்

Ponchandar said...

பந்தக்கால். பாண்டி, பல்லாங்குழி, ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்ததாம்...... இன்னும் விளையாட்டுகள் உள்ளன...

santhanakrishnan said...

இப்போது யோசித்து பார்க்கும் போது
ஆச்சர்யமாத்தானிருக்கு
இத்தனை விளையாட்டுக்களை
விளையாடியிருக்கிறோமா
என்று.
வாழ்தல் கூட சுவாரசியமான
விளையாட்டுத்தான்.

மிருணா said...

கருத்துக்கள் காணாமல் போய்விட்டன.அதற்கு வருத்தமும், இந்த மற்றும் பிற பதிவுகளில் கருத்துரைத்த நட்புக்களுக்கு நன்றியும்.

Harani said...

Miruna...

ithai verum kavithaiyaakap paarkkavillai. intha vilaiyattukkal ovvonrodum enakku niraiya thodarpu undu. Ovvonrilum niraiya cuutumangal undu. vaazkkaiyum ippadithaan. intha vilaiyattukkalil naam vetri peruvathu tholviyuruvathum vaazkkaiyil payanpadutthaalam. mika arumaiyaaka velipadithi irukkirirkal. vaazhthukkal. tamil software velai ceyyavillai. ciramathirk mannikkavum.

மிருணா said...

அனுபவப் பகிர்வுக்கு நன்றி திரு.ஹரணி.

போளூர் தயாநிதி said...

நல்ல கவிதை. நல்ல பார்வை

மிருணா said...

நன்றி திரு.போளூர் தயாநிதி

சுந்தர்ஜி said...

இட்டது பட்டானால் வாட் மீனிங் என்னர்த்தம்?, கலர் கலர் வாட் கலர், ஒரு குடம் தண்ணியெடுத்து ஒரு பூ பூத்திச்சு மற்றும் எல் ஓ என் டி ஓ என் லண்டனும் இன்றைக்கு நினைவுக்கு வந்தது.ஒரு முறை சத்தமாக யாரும் பார்க்காத போது சொல்லிப் பார்க்கிறேன்.