Friday, 22 July 2011

வேறு போதை


அணில் துள்ளலாய்த் தாவும்
நிழல், வெளிச்சம்
இறைந்து கிடக்கும் குன்றிமணிகளின்
மங்கல் சிவப்பு இதம் 
சுற்றி சுற்றிப் பறக்கும் 
ஆரஞ்சு பட்டாம்பூச்சிகள் 
யாருமற்ற ஆசுவாசத்தில்
உறவாடும் மரக் கிளைகள்
வாசனை வழிந்து பரவும்
மருதாணிப் பூக்கள்
பல வண்ண வடிவத்துடனான
சரளைகளின் சப்த  சிநேகம்
கணந்தோறும்  மாறும்
வயல்நீர் மேக ஓவியம்
மறக்க பறக்க மிதக்க
பின்னும்
வேறு போதை  நமக்கு!

6 comments:

Ramani said...

நானும் வயல்வரப்புகளில்
ஓடைக்கரையில் மாலைப்பொழுதுகளில்
என்னை மறந்து போதையில் ஆழ்ந்தவனைப்போல
இதுபோல் பல சமயங்கள் அமர்ந்திருக்கிறேன்
அந்தப் போதை அனுபவித்தவர்களுக்குத்தான் புரியும்
அதை மிக அழகாகச் மிகச் சரியாக கவியாக்கி இருக்கிறீர்கள்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

RVS said...

இதைப் படித்ததும் மயங்குகிறேன்! :-)

சிவகுமாரன் said...

ஆமாம்
கவிதை பாடிக் களிப்போ டிருக்க
புவியில் எத்தனைப் போதைப் பொருட்கள்

நிலாமகள் said...

'மறக்க பறக்க மிதக்க...'
போதைதான் ... ஆனால் 'போதை'யில்லை !
நினைவு படுத்தி விட்டீர்களே மிருணா... இப்போதே போயாகணும் அப்படியான சூழலுக்கென மனசு குறுகுறுக்குதே...

நிலாமகள் said...

சிவகுமாரனின் கீழ்க்கண்ட பதிவில் கூட சில போதைப் பொருட்களின் பட்டியலிருக்கிறது மிருணா. முடிந்தால் பாருங்கள்.

http://sivakumarankavithaikal.blogspot.com/2011/02/blog-post.html

மிருணா said...

# உண்மைதான். நன்றி திரு.ரமணி.
# பகிர்வுக்கு நன்றி திரு.ஆர்.வி.எஸ்.
# நன்றி திரு.சிவகுமாரன். நிலாமகள் சொல்லியிருக்கும் உங்கள் கவிதையைப் படித்தேன். உங்கள் பட்டியல் இன்னும் பெரியது. வலியது.
# நன்றி நிலாமகள். இப்பவே போகணும்னா ஒரு வழிதான் இருக்கு. உங்களுக்கு மட்டும் அந்த ரகசியத்த சொல்றேன்.சரியா...1, 2, 3 just close your eyes and visualize :-)