Tuesday, 27 September 2011

சுருட்ட இயலாத நீலக்கடல்


சுருட்டி விட இயலாத
நீலக் கடலை
ஒரு மாபெரும் பலூனுக்குள்
அடக்கிப் பறக்க விட இயலாத 
இப்பூமியின் காற்றை
ஒரே தட்டாய்த் தட்டி
செவ்வகமாக்க  இயலாத
வெண்பஞ்சு விரிவானை
வியந்து கடக்கையில்
கடக்க இயலாமலே போகிறது
ஒரு பார்வையில்
அழுந்தி வெளிவரும்
பல்வண்ண உணர்குமிழ்களை
ஒரு புன்னகையின்
பரவச வானவில்களை
ஒரு துயரில்
ஒரு பிரிவில் 
ஒரு நினைவில்
சுழன்று எழும்பும்
பல கோடி உன்னை.

12 comments:

சுந்தர்ஜி said...

சுருட்ட இயலாத நீலக்கடலையும்
பறக்கவிட இயலாத பூமியின் காற்றையும் செவ்வகமாக்க இயலாத வெண்பஞ்சு விரிவானையும் கடக்கும் கவிதை பல உணர்வுகளின் மையமாய் ஒரு கோடி உன்னைக் கடக்கவியலாது போவதுதான் கனவுக்கும் நனக்குமான இடைவெளியோ? சிந்தனையைக் கூராக்கும் கவிதை.அழகு.

நலமா மிருணா?நீண்ட இடைவெளிக்குப் பின் இன்றைக்குக் கிடைத்த ஒரு இடைவெளியில் இந்தக் கவிதை சிக்கியது.

கார்த்தி கேயனி said...

நல்ல கவிதை

Thanglish Payan said...

Kavithai Nalla irukku !!!!

கீதா said...

ரசிக்கவைக்கும் அழகான உவமைகள் மூலம், ஆழ்மனம் குடிகொண்ட அழகிய நினைவுகளின் வடிவத்தைச் சிலாகித்து வெளிப்படுத்தியவிதம் அருமை, மிருணா.

திருநாவுக்கரசு பழனிசாமி said...

எதுவுமே இயலாதவைகள் அல்ல நினைவுலகில்

vasan said...

பொளதீக‌த்தையே மாற்ற‌த் தூண்டும் துண்டித்த தொட‌ர்பு!
விசால‌மான, வித்தியாச‌ப் பார்வை.

நேசமித்ரன் said...

நண்பர்களிடம் உங்கள் தளம் குறித்து பகிர்ந்திருக்கிறேன் கவிதாயினி !

வாழ்த்துகள் !

மிருணா said...

# நன்றி திரு.சுந்தர்ஜி. நலமா?
# நன்றி தோழி.கார்த்திகேயனி.
# நன்றி திரு. தங்லீஷ் பையன்.
# நன்றி கீதா. உங்களின் தேர்ந்தெடுத்த சொற்கள் அழகு.
# நனவுலகிற்கு உண்மை. ஆனால் கவிதையில் பெரும்பாலும் நனவிலி முகிழ்த்துவிடுகிறதே. நன்றி திரு.திருநாவுக்கரசு.
# நன்றி திரு. வாசன்.
# நன்றி திரு.நேசமித்திரன். கவிதாயினி என்றதும் யாரது என்று திரும்பிப் பார்க்கத் தோன்றியது : )

நிலாமகள் said...

நில‌த்தினும் பெரிதே வானினும் உய‌ர்ந்த‌ன்று நீரினும் ஆர‌ள‌வின்றே ...?!
வாஞ்சையும் தாப‌மும் சுழ‌ன்றாடித் திளைக்கிற‌து க‌விதையுள்.

சிவகுமாரன் said...

தலைப்பும் , அந்த கடைசி வரியும் தனிக் கவிகள்.
அருமை.

Harani said...

உங்களின் கவிதைமொழி தனித்துவ மெருகேறுகிறது. உங்களுக்கென்று ஒரு பதிவு இலக்கிய உலகில் நிலைபெறும் என நம்புகிறேன். வாழ்த்துக்கள்.

மிருணா said...

# நன்றி தோழி.நிலாமகள். நீங்கள் குறிப்பிட்டுள்ள பாடலை இணையத்தில் தேடித் படித்தேன். ஒரு தோழியாக எழுதியவளை உணர்ந்தேன். மிகவும் நன்றி.
# நன்றி திரு.சிவகுமாரன். மீண்டுவிட்டீர்களா?
# நன்றி திரு.ஹரணி. தொடர்ந்து எழுத பெரிதும் ஊக்குவிக்கிற உங்கள் எழுத்திற்கு நன்றி.