Monday, 21 April 2014

புறம்/அகம்



சுடரின் ஒளிக்குப்
பின்னால்  ஒளிந்திருக்கிறது
திரியின் வலி கருமை பூசி

மலர்ந்திருக்கும் பூக்களுக்கு
நீர் பாய்ச்சுபவரின் சின்னஞ்சிறு மகள்
மரித்துப் போனது தெரியாது

கழன்ற வண்ணத்துப் பூச்சியை
மறக்க இயலவில்லை
வெறுமையில் சுருண்ட கூடிற்கு

வெட்டி வீழ்த்திய
கழுத்தில் இருந்து பீறிடுகிற ரத்தம்
தாயொருவளின் முலைப்பாலாய்
விழுந்து சிதறுகிறது நிலத்தில்

ஒரு உள்ளார்ந்த துயர்
கேவிக் கொண்டே இருக்கிறது
வன்பாலுறவுள்ளாக்கப்பட்ட பெண்கள்
வாழும் தேசத்தில்... 

4 comments:

நிலாமகள் said...

புற உலகின் அவலங்கள் பாதித்த அகம் வெகுவாய் கனக்கிறது தோழி. சிக்கனச் சொற்களில் எத்தனை வேதனை...!

மிருணா said...

இன்னும் எத்தனையோ...

yathavan nambi said...

அன்புமிகு வலைப் பூ அன்பருக்கு,
நல்வணக்கம்!

திருமதி ஞா.கலையரசி அவர்களால்,
வலைச்சரம் நான்காம் நாள் - 'மங்கையராய்ப் பிறப்பதற்கே...'

இன்றைய வலைச் சரத்தின்
சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,
வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!

வாழ்த்துக்களுடன்,
புதுவை வேலு

www.kuzhalinnisai.blogspot.fr
( S'inscrire à ce site
avec Google Friend Connect)

மிருணா said...

நன்றி திரு.யாதவன் நம்பி.