Wednesday, 9 April 2014

மதுரம்


எனக்குத் தெரியும்
மஞ்சள் மலர்கள் அளிக்கும் உற்சாகத்தை
வேறு ஏதாலும் பதிலீடு செய்ய முடியாதென.
எனக்குத் தெரியும்
முரட்டுக் கருவண்ணப் பாறைகளும்
வெட்டுக் குழிகளும்
அவற்றுள் தேங்கிய நீல வானும்
அழகின் சன்னதம் கொண்டு
மனம் நிலை பெறச் செய்வதை.
எனக்குத் தெரியும்
நிலம் நனைந்து பெருகும்
சிவந்த மண் வாசனை
ஒரு இருப்பின்  பள்ளங்களை
ஒவ்வொன்றாய் நிரப்பிவிடுமென.
எனக்குத் தெரியும்
அதல பாதாளத்தில் தலைகீழாக விழுகையிலும்
சன்னஞ் சதுர மழை கம்பிகளின்
சிறு மதுர ஒலி கொண்டு
மீண்டுமொரு முறை
இவ் வாழ்வை
இழுத்துக் கட்டி விடலாமென.

6 comments:

Ramki... said...

அதல பாதாளத்தில் தலைகீழாக விழுகையிலும்
சன்னஞ் சதுர மழை கம்பிகளின்
சிறு மதுர ஒலி கொண்டு
மீண்டுமொரு முறை
இவ் வாழ்வை
இழுத்துக் கட்டி விடலாமென.


Great...

சிவகுமாரன் said...

இழுத்துக் கட்டிவிட முடிகிறது உங்களால் மட்டுமே.

மிருணா said...

கருத்திற்கு நன்றி திரு.ராம்கி, திரு.சிவகுமாரன்.

கீத மஞ்சரி said...

வணக்கம். தங்கள் பதிவு இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
வாசிக்க http://blogintamil.blogspot.com.au/2014/09/blog-post_18.html
நன்றி.

ரூபன் said...

வணக்கம்
இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

மிருணா said...

அன்பிற்கு நன்றி கீதா, தகவலுக்கு நன்றி ரூபன்.