Thursday, 28 May 2015

எனவே

அந்தப் பூ புலி நகம் போன்றது
புலி நகம் கழுகின் அலகு போலிருந்தது
கழுகின் அலகு முந்திரி வளைவு
முந்திரி வளைவு பிறை நிலா
பிறை நிலா வானில் மிதக்கும் தோணி
தோணி ஒரு கருநீலத் திமிங்கல வால்
வால் மறி ஆட்டின் கருங் கொம்பு
கருங் கொம்போ கவண் பிளவு
கவண் பிளவு விரி மரக் கிளை
விரி மரக் கிளை குழைந்து பரவும் நீருற்று
நீருற்றோ அந்தியில் செம் பளிங்குப் பூ
அந்தப் பூ...

நன்றி: சிலேட் இதழ் - மே 2015 

8 comments:

ரூபன் said...

வணக்கம்
நல்ல கற்பனை இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வசந்தசெல்வன் said...

ஒவ்வொரு பொருளும் கண்ணின் முன் உருமாறுகின்றன உங்கள் சொற்களால் .. நல்ல கற்பனை..

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை.... ரசித்தேன்....

மிருணா said...

நன்றி திரு.ரூபன், வசந்த செல்வன், திண்டுக்கல் தனபாலன்.

நிலாமகள் said...

பூவிலிருந்து பூவுக்கான சுகமான பயணத்தை சாத்தியப்படுத்திய கவிதை வரிகள்...! எழுதிய கரங்களும் எண்ணிய மனமும் போற்றத் தக்கது.

திரும்பத் திரும்பப் படித்தும் திகட்டவில்லை தோழி!

நிலாமகள் said...

தலைப்பு தரும் சிந்தனையோட்டம் தனி!

நிலாமகள் said...

எனவே...
பூ வேறு; வண்ணத்துப் பூச்சி வேறல்ல...

வரிக்கு வரி அழகுறு அந்தாதி... வார்த்தைகளுக்குள் அடக்கிய படைப்பின் சூட்சுமம்!

மிருணா said...

நான் நினைத்த பொருளை அழகாகப் புரிந்து பகிர்ந்து உற்சாகமளித்தமைக்கு நன்றி நிலா. சந்தோஷமும்.